திருச்சியில் சொத்து பத்திரத்திற்க்கு அக்காவை மிரட்டிய போலி எஸ்.ஐ

திருச்சியில் சொத்து பத்திரத்திற்க்கு அக்காவை மிரட்டிய போலி எஸ்.ஐ

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள செல்வராஜ் - வெண்ணிலா தம்பதி வசிக்கின்றனர். வெண்ணிலாவின் தம்பி பெரம்பலூர் சுமங்கலி நகரைச் சேர்ந்த சஞ்சீவி மகன் ராமஜெயம் (42). இவர் கோவையில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை மறைவுக்கு பிறகு பெரம்பலூர் மாவட்டம் அரணாரையில் அவர் பெயரில் இருக்கும் வீட்டு பத்திரம், பட்டா ஆகியவற்றை தன் அக்காவிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் ராமஜெயம்.

இதனையடுத்து ராமஜெயம் பெரம்பலூரில் உள்ள நாடக கம்பெனியில் இன்ஸ்பெக்டர் உடை வாடகைக்கு எடுத்து அணிந்து கொண்டு வாடகை காரில் வெங்கடாசலபுரத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அக்காவை அழைத்து தன்னை காவல் அதிகாரி என்று கூறி தன் வீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார்.

உடனே அவரை தனது தம்பி என்று அடையாளம் தெரிந்து கொண்ட வெண்ணிலா ஆவணங்களைத் தர மறுத்துள்ளார். தொடர்ந்து ஆவணங்களை மிரட்டி கேட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்களும் சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து  கிராம பொதுமக்கள் ஒன்று கூடி சுற்றி வளைத்து அவரை பிடித்து  உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த உப்பிலியபுரம் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr