தண்டி யாத்திரை 91ம் ஆண்டு நினைவு தினம்

தண்டி யாத்திரை 91ம் ஆண்டு நினைவு தினம்

இந்தியாவில் ஆங்கிலோயர்கள் உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து கடந்த 1930 ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி புகழ்பெற்ற உப்பு சத்தியாககிரக யாத்திரையை மகாத்துமா காந்தியடிகள் தண்டியிலிருந்து தொடங்கினார்.

அதே நாளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாக்டர் ராஜ இல்லத்திலிருந்து மூதறிஞர் ராஜாஜி தலைமையில் காங்கிரசார் வேதராண்யத்திற்கு உப்பு எடுக்க யாத்திரையாக புறப்பட்டனர். உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடந்த 91வது ஆண்டை  நினைவு கூறும் வகையில் திருச்சியிலுள்ள உப்பு சத்தியாகிரக  நினைவு தூணில் மலர்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சுதந்தர போராட்ட தியாகிகள் தட்சணாமூர்த்தி, ராசு தென்கொண்டார், தண்டாயுதாபணி, சம்பந்தம்பிள்ளை ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr