காவிரி கொள்ளிடத்தில் 50 இடங்களில் பொதுமக்கள் இறங்க தடை - திருச்சி எஸ்.பி அறிவிப்பு

காவிரி கொள்ளிடத்தில் 50 இடங்களில் பொதுமக்கள் இறங்க தடை - திருச்சி எஸ்.பி அறிவிப்பு

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி மாவட்டத்தில் அதிக வெள்ள நீர் செல்வதால் கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட பேரிடர் மீட்பு படையினரும் அவசரகால மீட்பு பணிகள் மற்றும் முன்னோட்டம் செய்தனர்.

அவசர காலங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான முன்னோட்ட நிகழ்வுகளையும் நேரடியாக செய்து காண்பித்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ரப்பர் படகில் அமர்ந்து கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார்.... இரண்டு குழுவில் 64 பேர் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். 50க்கும் மேற்பட்ட இடங்கள் காவிரி கொள்ளிடத்தில் பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாவட்ட காவல்துறையினர், வருவாய்த்துறை இணைந்து கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

அவசர காலத்தில் பேரிடர் மையத்தை தொடர்பு கொண்டால் வருவாய்த்துறை, காவல் துறை இணைந்து  மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO