வைகுந்த ஏகாதசி விழா - பகல் பத்து 2ம் நாள்

வைகுந்த ஏகாதசி விழா - பகல் பத்து 2ம் நாள்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா நேற்று தொடங்கியது. பகல் பத்து இரண்டாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் திருநாரணன் முடி (அ) முத்தரசன் கொரடு அணிந்து சிகப்பு கல் அபய ஹஸ்தம், மகர கர்ண பத்திரம், அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை,

வெள்ளைக்கல் சின்ன வில்வ பத்திரபதக்கம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை அடுக்கு பதக்கங்கள் அணிந்து, பின் சேவையாக - புஜ கீர்த்தி, சிகப்புக்கல் தாமரை பதக்கம், வெண்பட்டு உடுத்தி அர்ஜுன மண்டபத்தில் சேவை சாத்திக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision