திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு- போலீசார் தடியடி
திருச்சி தெற்கு காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 35 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி தெற்கு காட்டூர் சார்பில் மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியியில் இன்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி மாலை 4.30 மணிவரை போட்டி நடந்தது
இந்த விழாவிற்கு லால்குடி ஆர்டிஒ வைத்தியநாதன் தலைமை வகித்து ஜல்லிகட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் வகித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 846 மாடுகளும் 228 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் 9 பேஜாக களம் இறக்கப்பட்டனர்
இதில் முதல் மாடாக அழகு முத்து மாரியம்மன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது.
மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சைக்கிள், சோபா செட். டிரஸ்சிங் டேபிள், டேபிள், ரொக்கம், வெள்ளி காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.22 மாடுகளை பிடித்த காட்டூரை சேர்ந்த ராஜேஷ் என்ற மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் கால்நடை உதவி இயக்குனர் மகேஷ் மற்றும் குழுவினர் கால்நடைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதி உடையாதா என்பது குறித்து ஆய்வு செய்து இந்தனர்.
மருத்துவ அலுவலர்கள் பக்ருதீன், விஜய் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பாய்ந்ததில் மொத்தம் 35 பேர் காயம் அடைந்தனர்இதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் மாட்டின் உரிமையாளர்கள் 21 பேர் பார்வையாளர்கள் நாலு பேர் அடங்குவார்கள்
இவர்களில் மாட்டின் உரிமையாளர்கள் வேங்கூரை சேர்ந்த மோகன் (17), காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ரமேஷ் (25) உட்பட 9 பேர் மேல் சிகிசைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு ஆர்டி ஒவைத்தியநாதன் தலைமையில் ஜல்லிகட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் சார்பில் திருச்சி மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜல்லிகட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதனால் தங்கள் பகுதியில் மாடுகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து உள்ளூர் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் விரைந்து சமரசம் செய்து வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியை அதிரடியாக முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள் அதுப்போல்ஜல்லிக்கட்டு காளைகளை வாடி வாசலுக்கு அழைத்து வந்த போது ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு வருவதற்காக ஜல்லிக்கட்டு காளைகளோடு குவிந்ததால் அந்த இடத்தில் போலீசார் தடியை வைத்து சிலரை அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn