கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

திருவெறும்பூர் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை வைத்தார்.

இதில் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கைலாஷ் நகர், சக்தி நகர், அம்மன் நகர், வின் நகர், பாலாஜி நகர், பாதிகளை சேர்ந்த குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்அவர்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அப்பகுதி பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அந்தந்த பகுதிகளில் நலச் சங்கத்தினர் வீடுகள் மற்றும் தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் படி அறிவுறுத்தினார்.

 

இதுபோல் திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மேலும் கண்காணிப்பு கேமரா உள்ள பகுதிகளில் திருட்டு போனால் திருடர்களை அடையாளம் காண முடிவதாகவும் அதனால் விரைந்து செயல்பட்டு திருடர்கள் இடமிருந்து பொருட்களை மீட்டு தர ஏதுவாக உள்ளதாகவும், இதனால் திருட்டுப் போன வீட்டின் உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் திருட்டு போன நகைகள் விரைந்து கிடைப்பதாகவும் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn