திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் - 259 நபர்களுக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் - 259 நபர்களுக்கு பணி நியமன ஆணை

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச ;சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி சமயபுரம் டோல்பிளாசா அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் இன்று (04.11.2023) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார்.

இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், பெல் நிறுவனம், ஜ.டி.சி நிறுவனம், டி.வி.எஸ், ரானே பிரேக்ஸ், டைம்ஸ் ப்ரோ, ரிலைன்ஸ் நிப்பான், ஆனந்த் இன்ஜினியரிங், சிவா ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட 155 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை நேர்காணல் செய்து பணிக்கு தேர்வு செய்தனர்.

இம்முகாமில், படித்த, வேலை வாய்ப்பற்ற 1,340 ஆண்கள், 1,122 பெண்கள் மற்றும் 44 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 2,506 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 155 தனியார்த்துறை நிறுவனங்கள் (06 திறன் பயிற்றுநர்கள் உட்பட) கலந்து கொண்டு நேர் காணல் நடத்தினர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இலவச திறன் பயிற்சிக்கு 41 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 254 (05 மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை நாடுநர்கள் பணி நியமன ஆணைகளை பெற்றனர். மேலும், 677 வேலை நாடுநர்கள் 2 ஆம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிகழ்வில், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஐ.மகாராணி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் து.பன்னீர் செல்வம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் எம்.ரவிசந்திரன், முதல்வர் சஞ்சய்சிங், துணை முதல்வர்கள் வி.ராஜூ, ஜி.சசிக்குமார் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision