திருச்சி பெரிய ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

திருச்சி பெரிய ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு மருத்துவமனை முதல்வர். டி. நேரு அவர்கள் பேசியதாவது... ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நாள்தோறும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும்  பொது மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான தரமான சிகிச்சை கிடைத்திட தொடர்ந்து பணிபுரிந்து விட வேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சிறந்த மருத்துவருக்கான பாராட்டு சான்றிதழை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை சிறுநீரகத்துறை மருத்துவர் பி.பிரபாகரன் விழாவில் டீன் நேருவை பாராட்டினார்.

ஏராளமான மருத்துவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி கிளப் திருச்சி மெட்ரோ நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLano