சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருதுபெற்ற தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காவிரி சபா புதிய ரக வாழை - இயக்குநர் பேட்டி

சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருதுபெற்ற தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காவிரி சபா புதிய ரக வாழை - இயக்குநர் பேட்டி

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் தேசிய அளவில் உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருது இந்த வருடம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு கிடைத்துள்ளது. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின்  நீடித்த  ஆராய்ச்சி பணியில், வாழை மேம்பாடு, உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் என்ற வெவ்வேறு தளங்களில் மேம்பட்ட ஆராய்ச்சிக்களை மேற்கொண்டு, வாழை உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் பெரும்பங்கு ஆற்றிவந்துள்ளதையடுத்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா கூறுகையில்... 104வாழை ஆராய்ச்சி மையங்களுடன் போட்டியிட்டு, சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக கருதப்பட்டு சர்தார் படேல் விருதும் ரூ 10லட்சமும் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியடைவதாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜீன் வங்கியைக் கொண்ட திருச்சி ஆராய்ச்சி மையத்தில் 25ஆண்டுகளாக 460வாழை ரகங்களை பராமரித்துவருவதாகவும், அழியும் வாழைரகங்களையும் உற்பத்திசெய்வதாகவும், தட்பவெப்பசூழலுக்கு ஏற்ப வளரும் வகையில் 6வகை வாழையினை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

விட்டமின் ஏ, இரும்பு சத்து குறைபாட்டினை போக்கும் வகையில் உண்ண ஏதுவாக வாழையில் புரோ-விட்டமின் ஏ, இரும்புசத்துக்களை உள்ளடக்கிய வாழையினை தயார்செய்து 3ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.திருநங்கைகளுக்கு பயிற்சிஅளித்து அவர்கள் வாழை, வாழைசார்ந்த பொருட்களை அரசு உதவியுடன் விற்பனைசெய்ய முயற்சித்துவருகிறோம், பார்வை குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேக்கரியில் பணியாற்ற பயிற்சி அளித்துள்ளோம், வாழையில் வாடல்நோயால் வாழைபயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் அளித்து வாடல்நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வாழையினை கண்டறிந்து, 60நாட்கள்வரையிலும் அதே பச்சை தன்மையுடன் இருக்கும்வகையில், அதன்பின்னர் பழுக்கவைத்து விற்பனைசெய்யப்படும் இந்த முறையானது விமானம் மூலம் அனுப்புவதைவிட கப்பல் மூலம் அனுப்பும்போது செலவுகுறைகிறது. பாரம்பரிய நேந்திரம் வாழையினை அரேபிய நாடுகளுக்கு 100கோடிக்கு ஏற்றுமதி செய்த நிலை மாறி தற்போது 400கோடிக்கு உயர்ந்துள்ளது. மேலும் தேனி வாழை நாடுகளைத்தாண்டி,  ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்பான காவிரி சபா 150ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவில் பயிரிடப்பட்டுள்ளது, காவிரி கல்கி ரகம் கஜா புயலிலும் பாதிக்கப்படாமல் நன்கு வளர்ந்துள்ளது.நேந்திரம் வாழையினைப்போன்று அதன் ஹைபிரிட் ரகமாக நேரடியாக உண்ணும்வகையில் அடுத்தஆண்டு சந்தைக்கு வரும் என்றும் தெரிவித்தார். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும்வகையில் உண்ணும்வகையில் கிராண்ட்-9, நெய்பூவனுக்கு குறைவாக அடர்த்திகொண்ட ஒருசில வாழைரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH