அமைச்சர் உதயநிதி மீது திருச்சி காவல்நிலையத்தில் புகார்

அமைச்சர் உதயநிதி மீது திருச்சி காவல்நிலையத்தில் புகார்

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருச்சி மாநகரில் பாலக்கரை காந்தி மார்க்கெட் கோட்டை அறியமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில்.... சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் நேற்றைய தினம் 'சனாதன ஒழிப்பு மாநாட்டை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அத்தகைய மாநாட்டில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் எழுதி வைத்து தயார் செய்த உரையில் உள் நோக்கத்தோடு வேண்டுமென்றே 'சனாதன தர்மத்ததை ஒழிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.

குறிப்பாக சிலவற்றை நாம் ஒழித்துதான் தான் ஆக வேண்டும் - எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனத்தை. எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி" சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதானம் சமத்துவத்திற்கும் சமுக நீதிக்கும் எதிரானது என்று சனாதன தர்மத்திறகு எதிராக உண்மைக்கு புறம்பான பேச்சை உள்நோக்கத்தோடு பேசியுள்ளார்.

மேற்படியான முழு பேச்சானது தினமலர் தினசரி நாளேடு முதல், TIMES NOW, REPBULIC TV &சமுக வலைதளங்களில் வைரலாக செய்தியாகவும் விவாதப் பொருளாகவும் உள்ளது. அதை நாங்களும், இந்த ஊரிலேயே படித்தோம் - பார்த்தோம். உலகத்தின் பல்வேறு பிரிவினர் இன்று சனாதன தர்மத்தின் பல்வேறு கூறுகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள். பல்வேறு அறிஞர்கள் சனாதன தர்மத்தின் விஞ்ஞானப் பூர்வமான விழுமியங்களை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

சனாதான தர்மத்தில் சாதி பாகுபாடுகள் எங்கும் முன்னிறுத்தப்படவில்லை உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் என்று எங்கும் சொல்லப்படவில்லை. சமூகத்தில் நேர்மையையும் - தர்மத்தையும் நிலை நிறுத்தி காலத்தால் அழிக்க முடியாத வாழ்வியலாக உள்ளது நான்/ நாங்கள் பிறப்பால் இந்து சனாதன தர்மத்தை உயர்வாக நம்புகிறவர்கள். அதை கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்வதாகவே அமைந்துள்ளது. மேற்படியாரின் பேச்சு எங்களை மிகவும் பாதித்து மன உளச்சலை ஏற்படுத்துவதாகவே உள்ளது. சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றமானது வெறுப்பு பேச்சை யார் பேசினாலும், அரசாங்கம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் மீதான இந்தப் புகாரை பெற்றுக் கொண்டு அவர் மீது தகுந்த IPC பிரிவுகளின் படி வழக்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் புகாரை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியை வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision