சிறார் இல்ல மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தலையணைகள் வழங்கிய இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம்

சிறார் இல்ல மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தலையணைகள் வழங்கிய இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம்

வாய்ஸ் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் 2006 ஆம் ஆண்டு நட்பு சிறார் இல்லம் துவங்கி, பெற்றோரில்லா மற்றும் சொந்தங்களில்லா குழந்தைகள் தங்க ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜூலை முதல் 40 பிள்ளைகள் உள்ளனர். 29 பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். 11 பிள்ளைகள் கல்லூரியிலும் மற்றும் தொழிற்பயிற்சிகளிலும் உள்ளனர்.

இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் சார்பாக, திருச்சி மருத்துவர்களும் உறுப்பினர்களும், நண்பர்களும் 29 பிள்ளைகளுக்கு, 2 பள்ளி சீருடைகளும், 11 பிள்ளைகளுக்கு 2 புது துணிகளும் வழங்கினர். மாம்பழச்சாலை வாய்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது 

இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம், திருச்சி கிளை தலைவர் மருத்துவர் என்.ராகவன் "நட்பு சிறார் இல்லம் பிள்ளைகள் நன்கு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்" என்றார் ர.  இந்திய குழந்தைகள் மருத்துவர் சங்கம், திருச்சி கிளை செயலாளர் மருத்துவர் ஏ.தங்கவேல், "நட்பு சிறார் இல்லம் பிள்ளைகளில் ஒரு சிலராவது மருத்துவம் படிப்புக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம், திருச்சி கிளை பொருளாளர் மருத்துவர் பி.மேகநாதன் மற்றும் அலுவலகப்பொறுப்பாளர்கள் ஏ.சத்தியமூர்த்தி உதவிகள் செய்தனர். நட்பு சிறார் இல்லம் மேலாளர் கவிதா வரவேற்றார். இல்ல அன்னை மேரி அம்மா நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn