திருச்சி மாவட்டத்தில் சோழர் கால சிவன் ஆலயத்தில் கற்சிலை திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் பழையப்பாளையம் ஊராட்சி அழகாபுரி சத்திரப்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் தற்போது மருங்காபுரி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆலயத்தில் மூலவராக ஸ்ரீ மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சித்தி விநாயகர், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் சிலை வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கோயிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக அர்ச்சகர் கார்த்திகேயன் வந்துபோது, ஆலயத்தில் மூலவருக்கு அருகில் இருந்த 3 அடி உயரம் கொண்ட சண்டிகேஸ்வரர் கற்சிலை காணமற்போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் ஜமீன் மற்றும் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டது.
மருங்காபுரி ஜமீன் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn