திமுக கூட்டணி கட்சிகள் மாமன்ற கூட்டத்தில் தொடர் புகார் -பரபரப்பு

திமுக கூட்டணி கட்சிகள் மாமன்ற கூட்டத்தில் தொடர் புகார் -பரபரப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (30.06.2023) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம்,  மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கவுன்சிலர்கள் முத்து செல்வம், ராமதாஸ், உள்ளிட்ட கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் மோசமாக உள்ளது. உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல் காஜாமலை பகுதியில் சுந்தர் நகர் சாலையில் ஒரு வழி பாதையாக மாறி உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டுகிறது. உடனடியாக பணிகளை முடித்து சாலைகளை போட கவுன்சிலர்கள் மாறி மாறி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 47 வது வார்டு கவுன்சிலர் அமமுக செந்தில் நாதன், மக்கள் பிரச்சினை பேச வாய்ப்புதரவிலை என மேயரிடம் கோபப்பட்டு கூட்ட அரங்கை விட்டு வெறியேறினார். பின்னர் மேயர் பேசுங்கள் என வெளியே சென்ற போது அழைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn