குடமுருட்டி ஆறு தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

குடமுருட்டி ஆறு தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் உத்தரவின்படி, நீர்வள ஆதாரத்துறையின் சார்பில், ஆற்று பாதுகாப்புக் கோட்டத்தின் வாயிலாக ரூபாய் 12.40 கோடி மதிப்பிலும், அரியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக ரூபாய் 6.35 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூபாய் 18:75 கோடி மதிப்பில் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்கள் நூர்வாரும் பணிகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆற்று பாதுகாப்புக் கோட்டத்திற்குட்பட்ட உய்யக்கொண்டான் மற்றும் குடமுருட்டி ஆற்றுப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு (17.5.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி குழுமாயி அம்மன் கோவில் அருகில் உய்யக்கொண்டான் கால்வாய், புத்தூர் கலிங்கு அருகில் இருந்து வயலூர் சாலை பாத்திமா நகர் வழியாக அம்மையப்பன் நகர் வரையிலான குடமுருட்டி ஆறு தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், வருகின்ற 31ஆம் தேதிக்குள் தூரவாரும் பணிகளை சிறப்பாக செய்து முடித்திடவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார் .

இதனைத் தொடர்ந்து கீழ்கண்டார் கோட்டையில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீரத் தொட்டி கட்டும் பணியினையும், ஆலத்தூர் ஊராட்சியில் குடியிருப்பு மனைப் பிரிவு திட்டத்திற்கான தல ஆய்வினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின்போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் பொறியாளர்கள். தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLan