நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக பகல் வேஷம் கலைந்து விட்டது முகமுடி கிழிக்கும் வாய்ப்பு - திருச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆவேசம்

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக பகல் வேஷம் கலைந்து விட்டது முகமுடி கிழிக்கும் வாய்ப்பு - திருச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆவேசம்
திருச்சி காஜாமலை பகுதியிலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிமுக,தமாக வேட்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.அதிமுக,தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்   ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார கூட்டத்தில் பேசினார். 
 அப்போது பேசிய ஓபிஎஸ்.....அதிமுக தொண்டர்கள் வீறு கொண்டு எழுந்துள்ளனர். 10மாத மக்கள் விரோத ஆட்சி படுதோல்வி அடைய செய்ய அதிமுகவிற்க்கு வாய்ப்பு அமைந்துள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலில் சின்ன சறுக்கல்.திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தால் அதிமுக சின்ன வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

படித்த பட்டதாரிகள் 52சதவீதம் உயர்த்தியது  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சேரும்.காவிரி நதிநீர் ஆணையம்,பங்கீட்டு குழு அமைத்து தந்த அரசு அதிமுகவையே சேரும்.கோவிட் காலத்தில் அதிமுக அரசு  மக்களை காப்பாற்றியது. ஆனால் திமுக அரசில் யாரு செத்தால் என்ன பிழைத்தால் என்ன என்று இருக்கும் அரசு திமுக என ஓபிஎஸ்சாடினார். 
நீட் தேர்வு ரத்து முடியல முடியாது வாய் சவுடால் பேச்சு.திமுக பகல் வேஷம் கலைந்து விட்டது .வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக.பொய் வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்ற தவறிய அரசு திமுக என்றார். பொங்கல் பரிசை ஜெயலலிதாவே பார்த்து பார்த்து நல்ல பொருட்களை  கொடுத்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக அரசு 2500 வழங்கியது. ஆனால் தி.மு.க அரசு 100 ரூபாய் கூட வழங்கவில்லை. இது போன்ற கேள்விகளை மக்கள் கேட்பார்கள் என்ற எண்ணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அச்சம் கொண்டதாக குறிப்பிட்டார்.

பகட்டு அரசியல்,விளம்பர அரசியல் செய்து ஆட்சியை பிடித்த திமுக முகமுடி கிழிந்துள்ளது.முழவதுமாக கிழிக்க நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது.தகுந்த பாடம் திமுகவிற்க்கு புகட்ட வாய்ப்பு. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மரண அடி விழும்.
நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் என பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn