பழைய நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் துறையூர் நகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் துடைப்பம், கூடைகள், ப்ளீச்சிங் பவுடர், ஆசிட் ஆகியவை இருந்துள்ளன.
இந்த நிலையில் குடோனை சுகாதார ஆய்வாளர் பூட்டிவிட்டு சென்றுள்ளார் இரவு கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அருகில் உள்ளவர்களுக்கு மூக்கில் நெடி ஏறியதால் சுற்றி பார்த்த பொழுது நகராட்சி கட்டிட குடோனில் உள்ள வேதிபொருள்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் குடோன் முழுவதும் எரிந்து தீ சாம்பலானது. சம்பவ இடத்திற்கு துறையூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் நகர் மன்ற தலைவர் ஆகியோர் விரைந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திடக்கழிவு வாகனங்களை அப்புறப்படுத்தினார்.
வேதிப்பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததால் அதன் நெடி காற்றில் பரவ தொடங்கியது. அருகிலேயே பேருந்து நிலையம் இருந்ததால் அங்குள்ள வியாபாரிகள் மூச்சுவிட சிரமப்பட்டு கடைகளை மூடி சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision