திருச்சியில் கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த விபத்து
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும், அதே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் நிலை தடுமாறி சாலையில் விழுந்த போது டிப்பர் லாரி அந்த பெண்ணின் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இருசக்கர வாகனம் ஓட்டிய கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இது குறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த கணவரை சிகிச்சைக்காகவும், தலை நசுங்கி இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் திருச்சி உறையூர் வாலாஜா ரோடு பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பதும், இறந்த பெண் அவரது மனைவி மகபூப் பிவி என்பது தெரிய வந்தது.
மேலும் இந்த விபத்து குறித்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision