திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் பக்கவாட்டில் விரிசல் - அதிகாரிகள் ஆய்வு.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் பக்கவாட்டில் விரிசல் - அதிகாரிகள் ஆய்வு.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது.

அப்படி நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் பொழுது அரியமங்கலம் ரயில்வே மேம்பாலம், திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம். துவாக்குடி என் ஐ டி மேம்பாலம் ஆகிய மேம்பாலங்கள்புதிதாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரியமங்கலம் மேம்பாலம் திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் வழியில் அமைக்கப்பட்ட மேம்பாலானத்தின் பக்கவாட்டில் தற்பொழுது பெய்து வரும் கனமழையின் காரணமாக விரிசல் விழுந்துள்ளது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை டீம் லீடர் குருசாமி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதோடு உடனடியாக அந்தசாலையில் செல்லும் வாகனங்களை ஒரு வழி பாதையாக செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் பழுதடைந்துள்ள பாலத்தின் பணியை விரைந்து சரி செய்வதற்கு உரிய பணியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த பாலத்தில் ஏற்கனவே மூன்று முறை விரிசல் விழுந்ததாகவும்இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூன்று முறை சரி செய்வதாக கூறி சரி செய்யவில்லை என்றும் அதற்காக அவர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இனி வரும் காலங்களில் இந்த பிரச்சனை சரி செய்யும் வரை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிப்பு கொள்ளவார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision