வடகிழக்கு பருவமழை - திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை - திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புகார் எண் “1077 மற்றும் 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம். தொடர்ந்து, 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் மாநகராட்சிக்குட்ட கட்டுப்பாட்டு அறைபுகார் எண் வட்டாட்சியர் அலைபேசி எண்

திருச்சி கிழக்கு 0431-2711602 9445461808

திருச்சி மேற்கு 0431-2410410 9445000602

திருவெறும்பூர் 0431-2555542 9790093270

ஸ்ரீரங்கம் 0431-2230871 9445000603

மணப்பாறை 04332-260576 9445000604

மருங்காபுரி 04332-299381 9840378255

லால்குடி 0431-2541233 9445000605

மண்ணச்சநல்லூர் 0431-2561791 9445000606

முசிறி 04326 260226 9445000607

துறையூர் 04327-222393 9445000609

தொட்டியம் 04326-254409 9445000608

இந்த கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வட்டாட்சியர்களின் அலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது, பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision