திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து 3 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து 3 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில அதிமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர் பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தனர்.

முதலில் அவசரக் கூட்டமும் அதனைத் தொடர்ந்து சாதாரணக் கூட்டமும் நடைபெற்றதில், மின்கட்டண உயர்வு மற்றும் மாநகர சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சொத்துவரியைத் தொடர்ந்து திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

இதனை திரும்பபெற மாநகராட்சி சார்பில் அரசுக்கு தெரிவிக்கவேண்டுமென அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதிஒதுக்கீடு, பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சார இணைப்பு கட்டணமும் உயர்ந்துள்ளதாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் கருத்துக்களை மாமன்றத்தில் எடுத்துக்கூற பேச்சுரிமை சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்யப்படும் என்று தேர்தலின்போது முதல்வர் அறிவித்துவிட்டு இதனை செயல்படுத்தவில்லை, மாறாக மின்கட்டண உயர்வால் வாழ்வாதாரம் இழக்கும்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO