மத்திய அரசின் முடிவை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் முடிவை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை மத்திய அரசு தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ரயில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ரயில்வே பணிமனைகளை தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே ரயில் வழித்தடங்கள் மற்றும் ரயில்கள் தனியார்மயத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட சூழலில், ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் அந்த துறையே அழிந்து போகும் ஆபத்து ஏற்படும் மேலும் ஏழை எளியவர்கள் ரயில்வேயை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் எனவே  மந்திய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் 150 க்கும் மேற்பட்டோர் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் மயம் -  தாராள மயம் என்ற கோட்பாட்டுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவை ஏற்பட்டால் முன் அறிவிப்புடன் ரயில் நிறுத்த போராட்டத்திலும் விரைவில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO