திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் இருந்து அரிஸ்டோ பாலம் வரை பழக்கடைகள், உணவு விடுதிகள், பெட்டிகடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில உணவு கடைகளால் மதிய நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களை சாலையில் நிறுத்தி உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினருக்கும் புகார்கள் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அங்கு செயல்படும் கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்ததால் இன்று நெடுஞ்சாலை துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஒரு சில கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இருந்த போதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கடைகள் செயல்பட்டு வந்தாலும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision