வட்டியில்லா கடன் பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்பொழுது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுயஉதவிக் குழு கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடப்பாண்டில் (01.04.2023) முதல் (13.12.2023) வரை 52,827 விவசாயிகளுக்கு ரூ.458.01 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் 15,059 விவசாயிகளுக்கு ரூ.63.19 கோடி வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன் தேவைப்படும் விவசாயிகள் நில உரிமை தொடர்பான 10 (1) கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று, அடங்கல் சான்று, ஆதார் சான்று நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயன்பெறலாம்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் உறப்பினராக இல்லாத விவசாயிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக இணைந்து விண்ணப்பித்து அனைத்து வகையான கடன்கள் பெற்று பயனடையலாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
கடன் பெறுவது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் திருச்சிராப்பள்ளி சரக துணைப்பதிவாளர்-7338749302, இலால்குடி சரக துணைப்பதிவாளர்-7338749303, முசிறி சரக துணைப்பதிவாளர் -7338749304, திருச்சிராப்பள்ளி மண்டல இணைப்பதிவாளர் -7338749300 ஆகும். எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளும்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision