போலீஸ் பணி திறனாய்வு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு...

போலீஸ் பணி திறனாய்வு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு...

காவல்துறையினருக்கான மாநில அளவில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் கொலை வழக்கில் தடய அறிவியல் நுட்பத்தின் மூலம் எதிரிகளுக்கு தண்டனை பெற்று தந்த நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் மற்றும் தடய அறிவியலில் பிரிவு, தடய மருத்துவவியலில் பதக்கம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய State level Police Duty Meet 2023) சென்னை ஊமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர்பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) 27.11.2023 முதல் 01.12.2023- வரை 5 தினங்கள் நடைபெற்றது.

 இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில், கமுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் போஸ் ஆகிய இருவரையும் அதே பகுதியை சேர்ந்த எதிரி அப்துல் ரகுமான் என்பவர் கொலை செய்ததை தடய அறிவியல் நுட்பத்தின் மூலம் புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் நிரூபணம் செய்தும் வழக்கின் எதிரிக்கு 48 வருடம் சிறை தண்டனை பெற்று தந்த வழக்கு கோப்பை காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தும்,

மேற்படி கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிக்கு தண்டனை பெற்று தந்த மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் / காவல்படை தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பணி பாராட்டு சான்றினை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் ஸ்ரீதர் அவர்களுக்கு வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் மேற்கண்ட போட்டியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, மாநில அளவில் தடய அறிவியலில் பிரிவில் (Forensic science), வெள்ளி பதக்கம், தடய மருத்துவவியலில் (Forensic Medico Legal) வெண்கல பதக்கம் என மொத்தம் 2 பதக்கங்களை வென்றும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் / காவல்படை தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பணி பாராட்டு சான்றினை மேற்படி காவல் ஆய்வாளர்களுக்கு திருச்சி மாநகர காவல்ஆணையர்  வழங்கி வெகுவாக பாராட்டியும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற ஏதுவாக ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision