100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு இலக்கை எட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம், எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.

ஜனநாயக கடமையாற்ற அனைவரும் முன்வர வேண்டும், விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம் என்பதனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, ஆண்டாள் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சுதந்திரமான, ஜனநாயக தேர்தலில் கண்ணியத்தை நிலை நிறுத்துவோம், அச்சமின்றியும், பாகுபாடு இன்றி அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision