கூட்டுறவுதுறை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.20,000/- அபராதம் விதித்து தண்டனை

கூட்டுறவுதுறை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.20,000/- அபராதம் விதித்து தண்டனை

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் 
சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை 
மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிராக

நிலுவையில் உள்ள வழக்குகளை 
விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சட்டரீதியான 
நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 
அறிவுரைகள் வழங்கியுள்ளார். 

கடந்த 06.05.2019ந் தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 
திருவளர்சோலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுதுறை கடன் சங்கத்தில் 
செயலராக பணிபுரியும் பெண் ஒருவரை, அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் 
ஒருவர் அசிங்கமாக திட்டியும், குற்றங்கருதி மிரட்டல் விடுத்தும், பெண்ணை
துன்புறுத்தியதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரி வின்சென்ட் (54) மீது கடந்த 16.05.2019-ந் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி மணிவாசகன் விசாரணையை முடித்து வைத்தார்.

இதில் ரூ.5,000/- அபராதமும், 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், Women Harassment வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் (ஆக மொத்தம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000/- அபராதம்) விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் கரிகாலன் ஆஜரானார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO