வ.உ.சி வாழ்க்கை வரலாறு புத்தகம் தயாரிப்பு - அமைச்சர் மகேஸ் பேட்டி

வ.உ.சி வாழ்க்கை வரலாறு புத்தகம் தயாரிப்பு - அமைச்சர் மகேஸ் பேட்டி

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று (05.09.2023) திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறுகையில்.... வ.உ.சி ஒரு அமைப்புக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்திய நாட்டிற்கு சொந்தமானவர். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் எனக்கு அளித்த முதல் கட்டளை வ.உ.சி வாழ்க்கை வரலாறு சம்பந்தமான புத்தகத்தை வெளியிட வேண்டும். அதன்படி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக துறையின் சார்பாக தயாரித்து வெளியிட்டு இருக்கின்றோம்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, வ.உ.சி பேரவை நிர்வாகிகள் ஹரிஹரன், செந்தில் மற்றும் மாநகர பகுதி பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision