திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழா முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழா முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்பு

 திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழா. தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்பு.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று, விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர் "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்'' கட்டடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

முப்பெரும்விழா

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் , கல்லூரி நிறுவனர் நாள் விழா , கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்கவிழா , "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்" கட்டட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா, கல்லூரியின் N.B. அப்துல் கஃபூர் குளிர்மை அரங்கில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேரா . கே.எம்.காதர் மொகிதீன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் . 

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் . இஸ்மாயில் முகைதீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் இறுதியாக கல்லூரியின் முனைவர் ஏ.முகமது இப்ராஹிம் நன்றி கூறினார். 

இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள் , இந்நாள் பேராசிரியர்கள் , முன்னாள் , இந்நாள் மாணவ , மாணவியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO