சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாம்பு கடித்து முதியவர் பலி

சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாம்பு கடித்து முதியவர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் 60 வயதான ராஜா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்துவிட்டார். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் பக்தர்கள் கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு சாலையோரமாக உறங்கி வாழ்ந்து வந்துள்ளார் ராஜா.

சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 250 ரூபாய் டிக்கெட் கவுண்டர் பகுதிகள் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு சுற்றி திறந்ததை பார்த்த பக்தர் பதறியடித்து  ஓட்டம் பிடித்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜா நல்ல பாம்பை பிடித்தபோது அவரது வலது கையில் கடித்துள்ளது. மீண்டும் இடது கையில் மாற்றி பிடிக்கும்போது இடது கையிலும் பாம்பு கடித்து உள்ளது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடித்த பாம்பினை சமயபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் செலுத்தும் ஆடு கோழி இவற்றை சேமித்து வைக்கும் பகுதி தூய்மையாக இல்லாமல் இருப்பதால் கொடிய விஷப்பாம்புகள் வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாடியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn