உக்ரைனில் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சி மாணவர் அஜித்தை மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை!

உக்ரைனில் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சி மாணவர் அஜித்தை மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை!

உக்ரைன் நாட்டிலிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என திருச்சியை சேர்ந்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். திருச்சி கீழமுல்லகுடி கிராமத்தில் சக்திவேல் - ஜோதிலெட்சுமி. இத்தம்பதியருக்கு மூன்று மகன்கள். விவசாய கூலி வேலை பார்த்து மூன்று பிள்ளைகளையும் படிக்கவைத்து ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் தயாநிதி M.Sec, அருண் BBA, ஆகியோர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்கள். மூன்றாவது மகன் அஜீத், உக்ரேன் நாட்டில் இறுதியாண்டு இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை படித்துவருகிறார். அங்கு போர் பதட்டம் காரணமாக பிள்ளையை நினைத்து பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் போர் அதிகரித்துவரும் நிலையில் அந்த இடத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை மீட்க வேண்டிய பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாணவ செல்வங்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டுவர மாணவர்களின் நிலை குறித்து உரிய பதிலை அளிக்காதது மெத்தனமாக செயல்படும் இந்திய தூதரகத்தின் அலட்சிய போக்கும். போர்ச் சூழலால் உக்ரைன் அரசு தனது வான்சேவைகளை முடக்கி உள்ளதால் இன்று இந்திய ஒன்றிய அரசு அனுப்பப்பட்ட விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் மாணவனை மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn