பணம் வாங்க வரிசையாக சென்ற பொதுமக்கள் - கிராம நிர்வாக அலுவலர் விரட்டியடிப்பு

பணம் வாங்க வரிசையாக சென்ற பொதுமக்கள் - கிராம நிர்வாக அலுவலர் விரட்டியடிப்பு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவையூர் கிராமத்தில், திமுக வேட்பாளர் அருண்நேரு, எம்எல்ஏ., பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க சென்று இருந்தார். 

திமுகவின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்கள் மத்தியில் தெரிவித்த எம் எல் ஏ பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், அருண்நேருவை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களில் பலரும் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்துக்குள் பணம் வாங்க வரிசையாக சென்றனர். இதனை பார்த்த தேவையூர் கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி, கூட்டமாக இங்கு என்ன செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதோடு இங்கெல்லாம் இது போன்று கூட்டமாக நிற்கக்கூடாது உடனடியாக கலைந்து செல்லுங்கள் என விரட்டி எல்லோரையும் இங்கிருந்து கிளம்புமாறு எச்சரித்தார்.

அவரை சமாதனம் செய்த உள்ளூர் உடன்பிறப்பு ஒருவர் அம்மா போங்கம்மா போங்க என விரட்டுவது போல பாவாலா காண்பித்ததோடு முடிஞ்சுது சார் இப்ப போயிருவாங்க என கூறியதால், மேலும் கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர் மரியாதையா போக சொல்லுங்க இல்லனா வேற மாதிரி ஆயிரும் என கடுமையாக கூறினார். இதனையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேவையூர் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision