திருச்சியில் லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

திருச்சியில் லட்சம்  ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார் . அதன் பேரில் மேற்படி அசோக் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை பத்திர பதிவு செய்ய அணுகியுள்ளார்.

தான் வாங்கவிருக்கும் விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பாக ரூபாய் ஒரு லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவரம்பூர் சார்பதிவக சார் பதிவாளர் பாஸ்கரன் அவர்களை அணுகியுள்ளார்.அதற்கு சார்பதிவாளர் பாஸ்கரன் மேற்படி நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் விவசாய நிலமாக பதிவு செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி  மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று சார்பதிவாளர் பாஸ்கரன் அசோக்குமாரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO