காந்தி மார்க்கெட் மாற்றப்படுமா? திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகிற 23ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை எங்கள் முதல்வர் எங்கள் பெருமை கண்காட்சி நடைபெற உள்ளது.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு...... தனக்கு மருத்துவமனை, கல்லூரி இருப்பதாக அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு எனக்கு அந்த மருத்துவமனையை வாங்கி தாருங்கள். அதை ஏழு மருத்துவர்கள் நடத்துகிறார்கள்.
கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை என்றார். வேண்டுமென்றால் வழக்கு தொடரட்டும் அது சந்திக்கிறது அண்ணாமலை வேண்டுமென்றால் வழக்கு தொடரட்டும் அதை சந்திக்க நாங்கள் தயார்.
அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கவில்லை திமுகவின் திட்டங்களை தான் அதிமுக முடக்கியது. திருச்சியின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்படும். 35 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், திருச்சி ஆகிய சிறைச்சாலைகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன கோவை சிறை செம்மொழி பூங்காவாகும். சேலம் சிறை விளையாட்டு திடலாகவும்,
திருச்சி சிறைக்கு 173 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக ஆட்சியர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது விரைவில் ஒப்புதல் பெற்று சிறைச்சாலை மாற்றப்படும். திருச்சி காந்தி சந்தை அதே இடத்தில் 11 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு செயல்படும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn