திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்றவரால் பரபரப்பு
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 வயது முடிந்த பெண்கள் விவரம் அறிந்தவர்கள் என்று சட்டரீதியாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் அரசு, திருமண வயதை 21 ஆக உயர்த்துவது முறை அல்ல என்றும், ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைந்து வரும் நிலையில், திருமண வயது 21 ஆக உயர்த்துவதால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை என்றும், எனவே இச்சட்டத்தை அரசு அமல்படுத்த கூடாது எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுக்கும் எந்த ஒரு மனுவிற்கும் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட புத்தாநத்ததைச் சேர்ந்த சோலை என்ற விவசாயி ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn