தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரி - திருச்சி அருகே திக்... திக்....

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரி - திருச்சி அருகே திக்... திக்....

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்டவாளத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் அவ்வழியே வந்த தேஜஸ் விரைவு ரயிலின் டிரைவர் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கத்திகாரம்பட்டி ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூட செல்லும்போது லாரி ஒன்று அதிவேகமாக வருவதை பார்த்து அனுமதித்தார். ஆனால் லாரி சரியாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பழுதடைந்து அப்படியே நின்றது.

Advertisement

இந்நிலையில் மதுரையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்னை செல்லவிருந்த தேஜஸ் விரைவு ரயில் அவ்வழியே வந்து கொண்டிருந்தது. நெருங்கி வந்த ரயிலை பார்த்தவுடன் லாரி டிரைவர் குதித்து உயிர் தப்பினார்.

Advertisement

அங்குள்ள மக்கள் அபாய குரல் எழுப்பிய உடன் தேஜஸ் விரைவு ரயிலை ஓட்டி வந்த டிரைவரின் சாதுரியத்தால் 10 அடி தூரத்திற்கு முன்பாகவே ரயிலை நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH