தந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் - இறந்த செய்தி கிடைத்து நல்லடக்கத்திற்கு வந்த மகள் - திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

தந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் - இறந்த செய்தி கிடைத்து நல்லடக்கத்திற்கு வந்த மகள் - திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

Advertisement

திருச்சி உறையூர் கீழவைக்கோல்காரத் தெருவை பூர்வீகமாக கொண்டவர் சுப்பிரமணி அங்கம்மாள் தம்பதியினர். அங்கம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். காது கேளாதோர். இவர்களின் ஒரே மகள் கலா. 

Advertisement

கலாவும் அவரது தாயாரும் தந்தையை பிரிந்து 20 வருடங்களுக்கு மேலாக ஈரோடு மாவட்டத்தில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் கொத்தனார் பணி புரியும் செந்தில்குமாரை திருமணம் புரிந்துள்ளார் கலா. இந்நிலையில் பாலசுப்ரமணியன் (வயது 75/2021) திருச்சி உறையூரில் தங்கி வாட்ச்மேன் பணி செய்து வந்தார். 

Advertisement

அப்பொழுது அறிந்தவர்கள் கொடுக்கும் உணவை உண்டு ஜீவனம் நடத்தி கடைவீதியில் படுத்து உறங்கி வாழ்ந்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த 29ம் தேதி காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 18ம் தேதி இரவு 10 மணிக்கு இறந்துவிட்டார். இந்நிலையில் உறையூர் காவல்நிலைய காவலர்கள் விசாரணையில் பாலசுப்பிரமணியன் மகள் ஈரோடு மாவட்டம் வீரபத்திரம் மாரப்பன் வீதியில் இருப்பதை அறிந்து தகவல் தெரிவிக்கின்றனர். தகவலின் அடிப்படையில் தந்தையின் புகைப்படத்தை பார்த்து அடையாளம் தெரிந்து இறந்துபோனது தனது தந்தை தான் என உறுதி செய்ததுடன் வயது முதிர்வு காரணமாக இறந்து போனார் என்றும் அவரது இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் தன்னிடம் இறுதி செலவு செய்வதற்கு போதிய பண வசதி இல்லாத காரணத்தால் தான் ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பம் நடத்தி வருவதாகவும் தனது தந்தையின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்யாமல் மேற்படி உடலைப் பெற்று காவல்துறையினரே அடக்கம் செய்யுமாறு மனு செய்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் திருச்சி உறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரெத்தினம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை பிரேத கிடங்கில் இருந்து இறந்த பாலசுப்பிரமணியன் உடலை காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஆகியோர் இறந்த பாலசுப்பிரமணியனின் உடலைப் பெற்றனர். பின்னர் திருச்சி மாநகராட்சி ஓயாமரி மயானத்தில் இருபது வருடங்களாக பிரிந்திருந்த மகள் கலா முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH