என் ஐ டி -இல் என்னதான் நடக்கிறது? - கேள்வி குறியாகும் மாணவ, மாணவிகள் வாழ்க்கை!

என் ஐ டி -இல் என்னதான் நடக்கிறது? - கேள்வி குறியாகும் மாணவ, மாணவிகள் வாழ்க்கை!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கியும், வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கியும் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் நித்ய செல்வம் என்பவருக்கு தொண்டையில் வலி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று மருந்து வாங்கி சாப்பிட்டு வந்ததாகவும், அப்பொழுது தொண்டை வலி பிரச்சனை தீர்வதற்காக வாய் கொப்பளிக்க கொடுத்த மருதை எடுத்து குடிப்பதற்காக கொடுத்துள்ளார்கள் என குடித்ததாகவும்

அப்பொழுது அவரது நண்பர் இந்த மருந்து வாய் கொப்பளிக்க தானே கொடுத்தார்கள் மருத்துவர்கள் எதற்காக குடிக்கிறாய் என கேட்டதாகவும் அதன் பிறகு தான் அதை பார்த்ததாகவும் பின்னர் அந்த மருந்து குடித்ததால் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி முறையிட்டதாகவும் அவர் உடனடியாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேரும்படி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையில் நித்திய செல்வம் தொண்டை வலிக்கான மருந்தை தான் வாய் கொப்பளிப்பதற்கு பதிலாக குடித்தாரா? அல்லது ஏதேனும் கல்லூரியில் பிரச்சனையா? அல்லது தனிப்பட்ட பிரச்சனையா? அல்லது குடும்ப பிரச்சனையா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்று வேறு ஏதேனும் மருந்தை குடித்தாரா என பல கோணங்களில் துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவர் அறிக்கை வந்த பிறகுதான் அது என்ன தொண்டை வலிக்கு கொடுக்கப்பட்ட மருந்து தவறுதலாக குடித்தது உண்மைதானா? அல்லது வேறு ஏதேனும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி என்ஐடி கல்லூரியில் ஒரு துறையின் விழா நடந்துள்ளது. அந்த துறையில் விழா முடிந்த பிறகு என் ஐடி விடுதிகள் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதி மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது அங்கு விடுதி வார்டன் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்த மாணவர்கள் மொட்டை மாடியில் இருந்து வெளிப்புறம் உள்ள சன்சைடு ஸ்லாப் வழியாக குதித்து உள்ளே வந்துள்ளனர்.

அப்படி வந்த பொழுது பிஆர்க் படிக்கும் ஆசிக் என்ற மாணவர் கீழே தவறி விழுந்ததாகவும், அதில் கால் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாகவும் துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே என் ஐ டி வளாகத்திற்குள் போதை வஸ்துகள் புலங்குவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதுவும் வெளியில் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் என் ஐ டி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருக்கு தனியார் வைஃபை கேபிள் கனெக்சன் கொடுக்க வந்த ஊழியரால் பாலியல் தொல்லை கொடுக்கபட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் தன்னுடன் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவ மாணவிகளின் துன்புறுத்தல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விடுதியை விட்டு வெளியேறி ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை அந்த மாணவி என்ன ஆனார்? எங்கே போனார் என்ற விவரமும் கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், என் ஐடி கல்லூரியில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவது என்.ஐ.டி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் என் ஐடிகல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மாதம் என்ஐடி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision