ஜாக்பாட்...ரூபாய் 5 லட்சத்தை டெபாசிட் செய்து, முதிர்வு காலத்தில் ரூபாய் 10,51,174 பெறுங்கள்
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) பல்வேறு காலகட்டங்களில் எஃப்.டி திட்டங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களில் இந்த வசதியைப் பெறுகிறார்கள். வெவ்வேறு முதிர்வு கால டெபாசிட்டுகளுக்கு, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 3 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவிகிதம் முதல் 7.5 சதைமிதம் வரையிலும் வருடாந்திர வட்டியை SBI வழங்குகிறது.
எஸ்பிஐயின் 10 ஆண்டு முதிர்வு திட்டத்தில் ஒரு வழக்கமான வாடிக்கையாளர் ரூபாய் 5 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் 6.5 சதவிகித வருடாந்திர வட்டி விகிதத்தில் மொத்தம் ரூபாய் 9,52,779 பெறப்படும். இதில் வட்டி மூலம் ரூபாய் 4,52, 779 நிலையான வருமானமாக இருக்கும். ஒரு மூத்த குடிமகன் எஸ்பிஐயின் 10 ஆண்டு முதிர்வு திட்டத்தில் மொத்தமாக ரூபாய் 5 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்ச்சி அடைந்தவுடன் 7.5 சதவிகித வருடாந்திர வட்டி என கணக்கிட்டு மொத்தம் ரூபாய் 10,51,174 கிடைக்கும். இதில், வட்டி மூலம் ரூபாய் 5, 51, 174 நிலையான வருமானம் கிடைக்கும்.
வழக்கமான வாடிக்கையாளர்கள் 10 வருட FDக்கு ஆண்டுதோறும் 6.5 சதவிகித வட்டியும், மூத்த குடிமக்கள் 7.5 சதவிகித பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் ரூபாய் 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும். வங்கிகளில் ரூபாய் 5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைகள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தால் (DICGC) காப்பீடு செய்யப்படுகின்றன. அதாவது ரூபாய் 5 லட்சம் வரையில் டெபாசிட் செய்யப்படும் பணம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision