மழையில் பரிதவித்த ஆட்டுக்குட்டி - பாலூட்டி வளர்க்கும் சகோதரர்கள்!
உயிருக்கு ஆபத்தான நிலையில் ரயில் ரோட்டில் நின்று இருந்த ஆட்டுக் குட்டியை மீட்டு திருச்சி சகோதரர்கள் பாலூட்டி வளர்க்கும் காட்சி நெகிழ வைத்துள்ளது.
Advertisement
நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. திருச்சியில் மாலை வேளையில் லேசான தூறல் மழை பொழிய ஆரம்பித்தது. இந்த வேளையில் திருச்சி தென்னூர் ரயில் ரோட்டில் மழைநீரில் ஆட்டுக்குட்டி ஆபத்தான நிலையில் நடுக்கிய உடம்போடு நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஜமீர் ஹசின்(12) ஜவீட் ஹசின்(10) ஆகிய இரண்டு சகோதரர்களும் ரயில்வே ரோட்டில் இருந்து குட்டியை மீட்டு தங்கள் வீட்டிற்கு அழைத்து பாலூட்டி வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த சிறு வயது சகோதரர்களிடம் பேசினோம்... "நாங்கள் நத்தர்ஷா பள்ளிவாசலில் எங்களுடைய வீடு இருக்கிறது. இங்கே எங்களுடைய பாட்டி வீடு இருக்கிறது. நேற்று பாட்டி வீட்டுக்கு வரும் வழியில் தான் ரயில்வே ரோட்டில் இந்த ஆட்டுக்குட்டியை பார்த்தோம்.
யாரும் இல்லாததால், பாவமாக இருந்ததால் அதனை நாங்கள் தூக்கிக்கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்தோம். இங்கு வந்து அதற்கு பால் கொடுத்து பார்த்து வருகிறோம். யாராவது வந்து கேட்டால் கொடுத்து விடலாம் என இருக்கிறோம். இல்லை என்றால் அதற்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் கொண்டாட உள்ளோம்" என்றார்கள் புன்னகையோடு....
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm