வருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக தேசிய அளவில் திருச்சியில் பயிற்சி முகாம்!

வருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக தேசிய அளவில் திருச்சியில் பயிற்சி முகாம்!

Government of India, Ministry of Youth Affairs and Sports, National Service Scheme (NSS) Regional Directorate Chennai in Association மற்றும் திருச்சி தேசிய கல்லூரி இணைந்து வருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக தேசிய அளவில் திருச்சி தேசிய கல்லூரியில் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை சேவைத் திட்டம் குறித்த முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் இருந்து சுமார் 200 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 44 பேர் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற 2021ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் டெல்லியில் இருந்து குழுக்கள் திருச்சிக்கு வர உள்ளனர்.

இந்த முகாமில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, அணிநடை பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், ஒருங்கிணைந்த பயிற்சியினை வழங்க உள்ளனர். இந்த விழாவை NSS regional director சாமூவேல் செல்லையா, தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் மற்றும் திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான பிரசன்ன பாலாஜி ஆகியோர் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Advertisement

மேலும் இம்முகாமில் யோகா, உடற்பயிற்சி, அணிநடை வகுப்பு பயிற்சி, கலாச்சாரம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு கடைசி மூன்று நாட்களில் டெல்லியில் இருந்து மத்திய அரசின் குழு மூலம் சிறந்த 44 பேர் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர்.