ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருப்பதியிலிருந்து வஸ்திர மரியாதை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருப்பதியிலிருந்து வஸ்திர மரியாதை!

ஏகாதசி தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு திருப்பதியில் இருந்து வஸ்திர மரியாதை இன்று செய்யப்பட்டது.

Advertisement

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் சுமார் கிபி 1320 ஆம் ஆண்டுகளில் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், ரங்கநாதர் திருப்பதியில் சுமார் 50 ஆண்டுகள் எழுந்தருளியதை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஏகாதசி தினத்தன்று திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செய்வது வழக்கம்.

இதன்படி இன்று ஏகாதசி தினத்தையொட்டி திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கும், நம் பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் தாயாருக்கு பட்டுப் புடவைகள், மாலைகள், மங்கலப் பொருள்கள் என கொண்டு வரப்பட்டது. இது பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வீதி உலா வந்தது. 

மேலும் திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் வந்த வஸ்திர மரியாதைகளை  ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வாங்கினர்.