மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு-13 காளைகள், 117 வீரர்கள் பங்கேற்பு

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு-13 காளைகள், 117 வீரர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஸ்ரீவேப்பிலை சாய்பாபா கோயில் டிரஸ்ட் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டிற்கு வேட்டி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா தொடங்கியது.

களத்தில் இறங்கிய 13 காளைகளை 117 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை களத்தில்  கலங்கடித்து விளையாடி வருகிறது. இதில் தலா ஒரு மாடு வீதம், வீரர்களின் கைகளில் சிக்காமல் விளையாடியது. வெற்றி பெற்ற காளைக்கும் அல்லது களங்கடித்த காளையை அடக்கிய வீரர்களின் அணிக்கும் என ரூ.7002/- ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. 

போட்டியினை மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி துவக்கிவைத்தார். போட்டியின் பாதுகாப்புக்காக காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் 70 காவலர்கள் பணியில் ஈடுபட்டார்கள். நிகழ்ச்சியினை காண சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபா கோவில் டிரஸ்டிகள் டி.சுரேஷ்குமார், எல்.எத்திராஜ், சண்முகம், பி.பி.பாஸ்கர், கே.எஸ்.எம்.இருளப்பன், உஷேன் ஆகியோர் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn