வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு தீவிரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு தீவிரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த இடங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும், வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்றுவரும் பிரத்யேக வழிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் (கட்டிடம்) பொறி.இரத்தினவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார் மற்றும் வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision