திருச்சியில் 1.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் - பெண் கைது

திருச்சியில் 1.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் - பெண் கைது

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் எண் : AK-29 திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்பொழுது ஒரு பெண் பயணி சந்தேகத்துக்கிடமாக வகையில் இருந்ததை தொடர்ந்து அவரையும், உடைமைகளையும் சோதனை செய்யப்பட்டது. அதில் சுங்க வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், சுங்கத் துறைக்கு அறிவிக்காமல், 24 காரட் மற்றும் 22 காரட் தூய்மையான 2291 கிராம் தங்கப் பொருட்களைக் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 1.53 கோடிகள் (தோராயமாக) ஆகும். மேலும் அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்ததில் அவர் தங்கத்தை இறக்குமதி செய்ய தகுதியான பயணி இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision