திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வரும் பிரபல ரவுடிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்டு வருவார்கள் மீதும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அந்த ரவுடிக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்தை ஒழிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பு வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் எடுக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வீடியோ பரவி வருகிறது. இது தொடர்பாக திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட இரண்டு பேர் விருதுநகரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்துக்கு சென்ற திருச்சி போலீசார், அங்கு பதுங்கி இருந்த இரண்டு பேரை நேற்று பிடித்து திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த முதல் கட்ட விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த திருப்பதி (33), கண்ணன் (40) எனவும், அவர்கள் நாம் தமிழர் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் எனவும் தெரிய வந்தது. இதனை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision