திருச்சி மாவட்ட மக்களுக்கான உதவி - புதிய காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவல் பொறுப்பேற்றுள்ள செ.செல்வநாகரத்தினம், கண்காணிப்பாளராக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்சனைகள்,
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் பற்றி விபரங்கள் மற்றும் தங்களது பகுதிகளில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தொடர்பாகவும் தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் பொதுக்களின் உதவி மையத்தை கீழ் கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், WhatsApp மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சேவையை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் தனிப்பிரிவு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட செ.செல்வநாகரத்தினம், காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.
மேலும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் இரகசியம் காக்கப்படும். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : (89391-46100)
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision