அகில இந்திய உயர்கல்வி தேர்வில் திருச்சி மாணவி தேர்ச்சி

அகில இந்திய உயர்கல்வி தேர்வில் திருச்சி மாணவி தேர்ச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் M.V. இலக்கியப்பிரியா வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். ஆசிரியரின் வழிகாட்டுதலோடு கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை (Joint Admission Test for Masters) (JAM) தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

அதன் படி பயிற்சி எடுத்து கடந்த 11 பிப்ரவரி 2024ல் தேர்வு எழுதினார். இதன் தேர்வு முடிவு இப்போது வெளியிடப்பட்டதில், அகில இந்திய அளவில் உயர் தரவரிசையுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை கல்லூரி தலைவர், செயலர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர். அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை தேர்வு என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மற்றும் ஏனைய சிறந்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு பாடங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க நடத்தும் தேர்வாகும்.

முதநிலை அறிவியல், முதுநிலை-முனைவர் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மற்றும் இளநிலை அறிவியல் பட்டத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரே தேர்வின் மூலம் சேர்க்கையை நடத்துவதும், அறிவியலை ஒரு பணிவிருப்பாக அறிவுத்திறனுள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்வதும் இத்தேர்வின் குறிக்கோள். நாளடைவில் இத்தேர்வு நாட்டின் பட்டப்படிப்பில் அறிவியல் கல்வித் தரத்தின் தரக்குறியீடாக விளங்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision