வழிப்பறி திருடர்களை மடக்கிப்பிடித்த காவலர் கழுத்தில் வெட்டிய ரவுடி கையில் கட்டு

வழிப்பறி திருடர்களை மடக்கிப்பிடித்த காவலர் கழுத்தில் வெட்டிய ரவுடி கையில் கட்டு

இன்று அதிகாலை திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி கோட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்ட மூன்று ரௌடிகள் அங்கிருந்து தப்பிவிட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்று அண்ணாசிலை பகுதி அருகே பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த ரவுடிகளில் ஒருவன் தான் கையில் வைத்திருந்த பட்டாகத்தியால் காவலர் அப்துல் காதரின் வலது கை, கன்னத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே சரிந்தார். உடனே ரவுடிகள் மூவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடிய மூவரையும் சுற்றி வளைத்து பிடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறார்கள் தற்போது கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தீவிர தேர்தல் வேட்டை நடத்திய போலீசார் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சரவணன் என்கின்ற புலி சரவணன் (22) மற்றும் சாரதி (19) ஆகிய இருவரை கைது செய்தனர். முன்னதாக சரவணன் என்கிற புலி சரவணனை போலீசார் கைது செய்ய முயன்ற போது, தப்பி ஓட முயற்சித்து கீழே விழுந்ததில் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில், காவலர் அப்துல் காதரை வெட்டியது சரவணன் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision