திருச்சி மாவட்டத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிடும் மாவட்ட வனத்துறை

திருச்சி மாவட்டத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிடும் மாவட்ட வனத்துறை

 தமிழகத்தில் தற்போது கோவிட் இரண்டாவது அறை பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட வனத்துறை சார்பாக முன்கள பணியாளர்களுக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் உணவுகளை அளித்து உதவி செய்து வருகின்றனர். ஏற்கனவே திருச்சி மாவட்ட வனத்துறையில் கோவிட் தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்ட வனத்துறையில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட வன அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 996 ரூபாயை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மாவட் ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வனதுறையில் பணிபுரிபவர்களிடம் ஒரு நாள் ஊதியம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு மற்றும் பல்வேறு உதவிகளை நேரடியாகவும் தன்னார்வலகளுடனும் சேர்ந்து மாவட்ட வன அலுவலர் செய்து வருகிறார்.

திருச்சி விஷயம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx