பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி வந்த தடகள வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் கலந்து கொண்டார். பாரிசில் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில் அவர் இன்று விமான மூலம் திருச்சி வந்தார் விமான நிலையத்தில் சுபா வெங்கடேசன் அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் என பல வரவேற்றனர்.
அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடைகள் போட்டு வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுபா வெங்கடேசன்..... கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த முறை இரண்டாவது முறையாக பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். எங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து நாங்கள் அளித்து வருகிறோம். இருந்தாலும் பதக்கங்கள் பெற முடியவில்லை.
வரும் காலங்களில் இன்னும் அதிகமாக பயிற்சியும், முயற்சியும் செய்து பதக்கங்களை வெல்வோம். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு எங்களுக்கு நல்ல ஊக்கம் அளித்து வருகிறது. விளையாட்டு விடுதியில் இருந்து முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றது நான்தான்.
இந்த முறை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதியிலிருந்து ஐந்து பேர் கலந்து கொண்டுள்ளோம். அது மிகவும் பெருமையாக உள்ளது. அதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களும் மிகுந்த ஆதரவாக எங்களுக்கு இருந்து வருகிறார்கள்.
அமெரிக்கா, சீனா போன்ற முதலிடங்களை பிடித்த நாடுகளில் அளிக்கப்படும் பயிற்சியை போலவே தான் எங்களுக்கும் பயிற்சிக்கு அளிக்கப்படுகிறது. இன்னும் சிறு சிறு தவறுகளை கலைந்து கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision